உலகக் கோப்பை 2023 புரோமோ வீடியோவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இடம் பெறாத நிலையில் வீடியோ வெளியிட்ட ஐசிசியை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிகிறது. உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் சென்னை, புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத் என்று 10 மைதானங்களில் இந்த தொடர் நடக்கிறது.
இது அவரோட பிரச்சனை: நல்ல நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம்: வங்கதேச மகளிர் கேப்டன் நிகர் சுல்தானா!
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியையும், 3ஆவது போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசிசி உலகக் கோப்பைக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டது.
5 விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி; நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா!
இதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னதாக நடந்த போட்டிகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா என்று ஒவ்வொரு அணியும் இடம் பெற்றன. அணியின் கேப்டன்களும் இடம் பெற்றிருந்தனர். தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், முத்தையா முரளிதரன், ரோகித் சர்மா, சுப்மன் கில், ஜெமிமா டோட்ரிக்ஸ், இயான் மோர்கன், ஜாண்டி ரோட்ஸ் என்று கிரிக்கெட் வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த வீடியோவிற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குரல் கொடுத்தார். மேலும், வீடியோவின் இறுதியிலும் வந்து இது ஒரு நாள் எடுக்கப்படும் என்று டிராபியை பற்றி குறிப்பிட்டு கூறினார்.
பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் ஏ? டைட்டில் ஜெயிக்குமா இந்தியா ஏ? ஆசிய கோப்பை ஃபைனல் இன்று!
ஆனால், பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ஷஹீன் அப்ரிடி இடம் பெற்றிருந்தார். அணியின் கேப்டன் பாபர் அசாம் இடம் பெறவில்லை. ஆனால், இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலக தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இடம் பெறவில்லை. கடந்த உலகக் கோப்பை வென்ற அணிகளின் காட்சிகளும் வீடியோவில் உள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1992 இல் பாகிஸ்தானின் வெற்றித் தருணம் ஐசிசியின் விளம்பர வீடியோவில் இடம் பெறவில்லை.
நடுவரின் தவறான முடிவு: ஆத்திரத்தில் ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்; வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாம் இல்லாமல் உலகக் கோப்பை விளம்பரம் நிறைவடையும் என்று நினைத்தவர், உண்மையில் தன்னை ஒரு ஜோக்கராக காட்டிக்கொண்டார். வாருங்கள் தோழர்களே, கொஞ்சம் வளர வேண்டிய நேரம் இது" என்று அக்தர் கூறியுள்ளார்.