#BANvsSL வீரர்களுக்கு கொரோனா உறுதியானாலும் திட்டமிட்டபடி நடக்கும் ஒருநாள் தொடர்..!

Published : May 23, 2021, 02:38 PM IST
#BANvsSL வீரர்களுக்கு கொரோனா உறுதியானாலும் திட்டமிட்டபடி நடக்கும் ஒருநாள் தொடர்..!

சுருக்கம்

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கிய நிலையில், இலங்கை வீரர்கள் இருவர் மற்றும் சமிந்தா வாஸ் ஆகிய மூவருக்கு கொரோனா உறுதியானது.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.

இந்த போட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை வீரர் ஷிரான் ஃபெர்னாண்டோவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது.

கடந்த 18ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கை வீரர் இசுரு உடானா மற்றும் பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில், கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

இலங்கை வீரர் ஷிரான் ஃபெர்னாண்டோவுக்கு கொரோனா உறுதியானாலும், வங்கதேசம் - இலங்கை இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடந்துவருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?