ரிஷப் பண்ட் மிகச்சிறந்த கேப்டன்..! டெல்லி அணியில் அவரது கேப்டன்சியில் ஆடும் வீரர் புகழாரம்

By karthikeyan VFirst Published May 22, 2021, 9:58 PM IST
Highlights

ரிஷப் பண்ட் மிகச்சிறந்த தலைமைத்துவ பண்புகளை நல்ல கேப்டன் என்று அவரது கேப்டன்சியில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் ஆவேஷ் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டை காயம் காரணமாக ஆடாததால், டெல்லி கேபிடள்ஸ் அணியை ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.

ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன்சி புதிதுதான் என்றாலும், மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தினார். இக்கட்டான நிலைகளில் பதற்றமடையாமல், பவுலர்களையும் வீரர்களையும் ஊக்குவித்து அணியை அருமையாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றார்.

ஐபிஎல் 14வது சீசன் 29 போட்டிகள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. டெல்லி அணி ஆடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் அருமையாக பந்துவீசி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் 2வது இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், சிறப்பான பவுலிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆவேஷ் கான், ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார்.

ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பேசியுள்ள ஆவேஷ் கான், ரிஷப் பண்ட் அவரது சிறந்த தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தினார். எங்கள் அணி பெற்ற முடிவுகள் தான் அதற்கு சான்று. பவுலர்களை அருமையாக ரோடேட் செய்தார் ரிஷப். அவரது கேப்டன்சியில் ஆடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவரது பேட்டிங் ஃபார்மும் அருமையாக இருந்தது. டீம் மீட்டிங்கின்போது ஊக்கப்படுத்தும் விதமாக மட்டுமே பேசுவார். அணியின் நலன் தான் அனைத்திற்கும் மேல் என்று நினைத்து செயல்படும் கேப்டன் என்று ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை ஆவேஷ் கான் புகழ்ந்துள்ளார்.
 

click me!