டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான பவுலிங் யூனிட்..! 5 பவுலர்களை சொன்ன முன்னாள் பவுலர்

By karthikeyan VFirst Published May 22, 2021, 9:55 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஃபைனலில் மோதும் இரு அணிகளுமே பவுலிங்கில் சமபலம் வாய்ந்த அணிகள். இந்நிலையில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஷ் நெஹ்ரா, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும், அஷ்வின், ஜடே ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாகவும் ஆடவேண்டும் என்று கூறியுள்ளார். ஒருவேளை பிட்ச் பசுமையாக இருந்தால் ஒரு ஸ்பின்னரை குறைத்துவிட்டு கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக முகமது சிராஜை ஆடவைக்கலாம் என்றார் ஆஷிஸ் நெஹ்ரா.
 

click me!