IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! 16 சீசன்களில் 14 கேப்டன்கள்.. புதிய கோச்களும் நியமனம்

By karthikeyan V  |  First Published Nov 3, 2022, 5:36 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 


ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ்(5), சிஎஸ்கே (4) ஆகிய அணிகள் கோப்பைகளை வாரி குவித்துவரும் நிலையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து விளையாடினாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவருகின்றன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் நிறைய மாற்றங்கள் செய்துவருகின்றன. அணி வீரர்கள், காம்பினேஷனில் மட்டுமல்லாது கேப்டன், பயிற்சியாளர்களையும் தொடர்ச்சியாக மாற்றிவருகின்றனர். ஆனால் எதிர்பார்க்கும் ரிசல்ட் மட்டும் கிடைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ

2014 ஐபிஎல்லில் மட்டும்தான் பஞ்சாப் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தாறுமாறான மாற்றங்களுடன் களமிறங்கி, கடைசியில் ஏமாற்றத்துடன் சீசனை முடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது.

அனில் கும்ப்ளேவின் பயிற்சியில் கேஎல் ராகுலின் கேப்டன்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மீது  பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பஞ்சாப் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனாக அபாரமாக ஆடிவந்த ராகுல், 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் பஞ்சாப் அணியிலிருந்து விலகினார். இதையடுத்து கடந்த சீசனில் மயன்க் அகர்வால் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் பிளே ஆஃபிற்கு கூட பஞ்சாப் அணி முன்னேறவில்லை.

இதையடுத்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே நீக்கப்பட்டு டிரெவர் பேலிஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் பஞ்சாப் அணியின் துணை மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் லாங்கிவெல்ட்டும் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து மயன்க் அகர்வால் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக அவ்வப்போது செயல்பட்டுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் கேப்டன்சி செய்த அனுபவமும் அவருக்கு உள்ளது. 

ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை தகர்த்த விராட் கோலி

ஐபிஎல் 16வது சீசனுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 14வது கேப்டனாக ஷிகர் தவானை நியமித்துள்ளது. 16 சீசன்களில் 14 கேப்டன்களை நியமித்துள்ளது. அதிகமான கேப்டன்களை மாற்றிய டாப் அணி பஞ்சாப் கிங்ஸ் தான். வேறு எந்த அணியும் இந்தளவிற்கு கேப்டனை மாற்றியதில்லை. மற்ற அணிகள் எல்லாம் தங்கள் அணிக்கான சரியான வீரர்களைத்தான் தேடுகின்றன. ஆனால் கேப்டனையே இன்னும் தேடிக்கொண்டிருக்கும் ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் தான்.
 

click me!