கையில் காயம்: வலியால் மாத்திரை எடுத்துக் கொண்ட ஷர்துல் தாக்கூர்: மீளுமா இந்தியா?

By Rsiva kumarFirst Published Jun 9, 2023, 4:23 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் மாத்திரை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

TNPL 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு யார் கேப்டன்? இதுவரையில் அறிவிக்கப்படவில்லை!

அலெக்ஸ் கேரி 48 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். ஆஸி, கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கில் 13 ரன்களில் வெளியேறினார். சட்டேஷ்வர் புஜாரா 14 ரன்களிலும், விராட் கோலி 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

பின்னர் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்க ஓவரிலேயே கேஎஸ் பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் அடிமே அடி வாங்கி வலது கையில் காயமடைந்த நிலையில் வலி மாத்திரை எடுத்துக் கொண்டார். தற்போது வரையில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், ரஹானே 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஷர்துல் தாக்கூர் 21 ரன்னுடனும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

click me!