டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்

By karthikeyan VFirst Published Nov 3, 2021, 4:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கான ஷேன் வார்னின் ரூட் மேப்பை பார்ப்போம். எந்த 4 அணிகள் அரையிறுதில் மோதும், அதில் எந்த 2 அணிகள் வெற்றி பெற்று ஃபைனலில் மோதும் என ஷேன் வார்ன் கணித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பார்க்கப்பட்டன. 

பாகிஸ்தான் அணிக்கு அமீரக மைதானங்கள் ஹோம் மைதானங்கள் என்பதால், அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்றவகையிலும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவாக இருக்கிறது என்றவகையிலும் பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்டது. அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல், க்ரூப் 2-ல் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் படுமோசமாக ஆடிவருகின்றன.

க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க - T20 World Cup ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்த முகமது நபி? தீயாய்பரவும் தகவல்!உண்மை என்ன?

இந்த டி20 உலக கோப்பை ஃபேவரைட்ஸாக தொடங்கிய இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை கடினமாக்கி கொண்டுள்ளது.  இனி ஆடும் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாலும் கூட, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். 

இந்நிலையில், இந்த உலக கோப்பையில் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அரையிறுதியில் வெற்றி பெற்று எந்த 2 அணிகள் ஃபைனலில் மோதும் என்பதை ஷேன் வார்ன் கணித்துள்ளார்.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

இதுதொடர்பாக ஷேன் வார்ன் பதிவிட்டுள்ள டுவீட்டில், க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.

க்ரூப் 1-ல் புள்ளி  பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியும், க்ரூப் 2-ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் அணியும் ஒரு அரையிறுதி போட்டியில் மோதும். க்ரூப் 1-ல் 2ம் இடத்தில் இருக்கும் அணியும், க்ரூப் 2-ல் முதலிடத்தில் இருக்கும் அணியும் மற்றொரு அரையிறுதி போட்டியில் மோதும்.

அந்தவகையில், இங்கிலாந்தும் இந்தியாவும் ஒரு அரையிறுதி போட்டியிலும், பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மற்றொரு அரையிறுதி போட்டியிலும் மோதும் என ஷேன் வார்ன் கணித்துள்ளார்.

 

I still believe the teams that will top each group & make it through will look like this, plus semi’s & final…

1.England
2. Australia

1.Pakistan
2. India

Semi’s

Eng V India
Aust V Pak

So final will be either

India V Pak or
Aust V England

— Shane Warne (@ShaneWarne)

இந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று, ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் அல்லது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என ஷேன் வார்ன் கணித்துள்ளார்.
 

click me!