சச்சின், கோலி, ஸ்மித் போன்ற லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஷாகிப் அல் ஹாசன்.. ஒருநாள் கிரிக்கெட்டில் செம சம்பவம்

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 2:14 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் சீனியர் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடிவருகிறார். 
 

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் சீனியர் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடிவருகிறார். 

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணியின் சீனியர் வீரரான ஷாகிப் அல் ஹாசன், பேட்டிங்கில் செம ஃபார்மில் உள்ளார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தி ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸை வழங்கிவருகிறார். 

உலக கோப்பையில் ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். இதுவரை ஆடிய 4 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 384 ரன்களை குவித்து, டாப் ரன் ஸ்கோரராக திகழ்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அரைசதமும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதமும் அடித்தார். இலங்கைக்கு எதிரான போட்டி மழை காரணமாக டாஸே போடாமல் கைவிடப்பட்டது. உலக கோப்பையில் தொடர்ச்சியாக நான்குமுறை  50க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள ஷாகிப், அதற்கு முன்னதாக நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார். 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 முறை அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஷாகிப் அல் ஹாசன் இணைந்துள்ளார். முதன்முதலாக தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துதான். அவர் 1987 உலக கோப்பையில் அடித்தார். 32 வீரர்கள் இருக்கும் இந்த பட்டியலில் ஷாகிப்பும் இணைந்துள்ளார். 

சித்து, சச்சின் டெண்டுல்கர், கிரேம் ஸ்மித், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் விராட் கோலி மட்டுமே 2 முறை தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்துள்ளார். ஷாகிப்புக்கு முன்னதாகவே இந்த பட்டியலில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!