காயத்திலிருந்து மீண்ட ஃபாஸ்ட் பவுலர்.. நியூசிலாந்துக்கு எதிரா செம உற்சாகத்தில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 1:15 PM IST
Highlights

இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.
 

இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.

டுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு அடி மேல் அடியாக விழுந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது. 

முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் தோல்விகளுக்கு அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்களின் காயமும் ஒரு காரணம். சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஸ்டெய்ன், காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடாமல் உலக கோப்பையீலிருந்து விலகினார். 

அவரை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் லுங்கி இங்கிடி காயமடைந்தார். அதனால் அவரும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. காயம் குணமடைந்து முழு உடற்தகுதியை பெற்றுள்ள இங்கிடி, நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுகிறார். 

எனவே தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலிங் சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இதுவரை தனி ஒருவனாக ரபாடா கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில், இந்த போட்டியில் ரபாடாவுடன் இங்கிடியும் இணைய உள்ளதால், நியூசிலாந்தை வீழ்த்த முனையும் தென்னாப்பிரிக்க அணி. ஆனாலும் தென்னாப்பிரிக்க அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கஷ்டம் தான். 

click me!