நாடே உங்க பின்னாடி இருக்கு.. அடிச்சு நொறுக்குங்க!! சர்ஃபராஸ் அகமதுவுக்கு ஒரேயொரு ஆறுதல்

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 12:42 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான படுதோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 
 

உலக கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு படுமோசமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பேயில்லை. 

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. உலக கோப்பையில் ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்திராத பாகிஸ்தான் அணி, இந்த முறையாவது இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் இறங்கியது. ஆனால் கோலி தலைமையிலான வலுவான இந்திய அணியின் மீது எந்த வகையிலுமே பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. 

படுமோசமாக ஆடி படுதோல்வியடைந்தது பாகிஸ்தான். இதையடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

பாகிஸ்தான் வீரர்கள், எங்களை விட்ருங்க என்று கெஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஏசன் மணி, சர்ஃபராஸிற்கு ஆறுதல் கூறி உத்வேகப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது. 

விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் இனிவரும் போட்டிகளில் கவனம் செலுத்தி ஆடுங்கள். ஒட்டுமொத்த பாகிஸ்தானே, அணிக்கு ஆதரவாக உங்களுக்கு பின்னால் நிற்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் கவனம் செலுத்தி சிறப்பாக ஆடுங்கள் என்று சர்ஃபராஸை மணி உற்சாகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைவரும் பாகிஸ்தான் அணியை தூற்றிவரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் ஆறுதல் வார்த்தைகள் பாகிஸ்தான் அணிக்கு தேவையான ஒன்றுதான். 

click me!