டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ

By karthikeyan V  |  First Published Nov 2, 2022, 4:56 PM IST

டி20 உலக கோப்பையில் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் நோ-பால் விவகாரத்தில் விராட் கோலியும் ஷகிப் அல் ஹசனும் இனிமையாக மோதிக்கொண்ட வீடியோ வைரலாகிவருகிறது.
 


டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

Latest Videos

undefined

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..! முதலிடத்தில் கோலி.. வெறித்தனமா விரட்டும் ரோஹித்

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹுசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், டஸ்கின் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். கேஎல் ராகுல் 32 பந்தில் 50 ரன்களும், விராட் கோலி 44 பந்தில் 64 ரன்களும் அடிக்க, சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்கள் அடித்து அருமையான கேமியோ பங்களிப்பு செய்ய 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்களை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை வங்கதேசம் விரட்டிவருகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கின்போது, 16வது ஓவரை வீசிய மஹ்மூத் அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்ஸர் வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தையும் பவுன்ஸராக வீசினார். டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஒரு பவுன்ஸருக்கு மட்டுமே அனுமதி. மஹ்மூத் 2வது பவுன்ஸர் வீசியதால் அந்த பந்தை எதிர்கொண்ட விராட் கோலி சிங்கிள் அடித்துவிட்டு நோபால் கேட்க, அம்பயர் எராஸ்மஸும் நோபால் கொடுத்தார்.

கோலி, ராகுல் அதிரடி அரைசதம்.. சூர்யகுமார் சிறப்பான கேமியோ! வங்கதேசத்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

விராட் கோலி கேட்டபின்பு அம்பயர் நோபால் கொடுத்ததாக அதிருப்தியை வெளிப்படுத்தினார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன். ஆனால் அதை கோபமாக அப்பீல் செய்யாமல், கோலியின் தோள்மீது கைபோட்டு சிரித்துக்கொண்டே கேட்டார். கோலியும் விளக்கம் கொடுக்க, அம்பயரும் ஷகிப்பிடம் விளக்கம் கொடுக்க, நகர்ந்து சென்றார் ஷகிப் அல் ஹசன். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

pic.twitter.com/jSDL8FWGpS

— Guess Karo (@KuchNahiUkhada)
click me!