டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..! முதலிடத்தில் கோலி.. வெறித்தனமா விரட்டும் ரோஹித்

By karthikeyan VFirst Published Nov 2, 2022, 2:54 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், இடையில் 3 ஆண்டுகளாக பெரியளவில் ஃபார்மில் இல்லாமலும் சதம் அடிக்காமலும் இருந்துவந்தார்.

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த விராட் கோலியின் முதல் சர்வதேச டி20 சதம் அது. ஆசிய கோப்பையில் அசத்திய விராட் கோலி, அவரது சிறப்பான ஃபார்மை டி20 உலக கோப்பையிலும் தொடர்ந்துவருகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு மரண அடி.. காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய அதிரடி வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை மீண்டும் முறியடிக்க தொடங்கியிருக்கிறார். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்களையும் குவித்த விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் முக்கியமான போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடிவருகிறார். இன்று அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

டி20 உலக கோப்பையில் 1016 ரன்களை குவித்த இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் இருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது டி20 உலக கோப்பையில் 1017* ரன்களை எட்டி டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ODI அணிகள் அறிவிப்பு! ODI அணியில் ரஜத் பட்டிதர், திரிபாதிக்கு இடம்

இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (965 ரன்கள்) 3ம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 921 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா அவரது வழக்கமான அதிரடி இன்னிங்ஸ்கள் சில ஆடினால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இருவருக்கும் இடையேயான இன்னிங்ஸ் வித்தியாசம் பெரிது.
 

click me!