இந்தியாவிற்கு எதிராக விசித்திரமான செயல்பாடு..! வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கம்

By karthikeyan V  |  First Published Nov 2, 2022, 7:09 PM IST

டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டஸ்கின் அகமதுவுக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் கொடுத்தது குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கும் இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2ல் இன்று வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதியில் ஒரு கால் வைத்துவிட்டது. கடைசி போட்டியில் நெதர்லாந்துடன் மோதவுள்ளதால் அந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்பதால் 8 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி.

Tap to resize

Latest Videos

ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மழை.. மழையின் உதவியுடன் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு கால் வைத்த இந்தியா

வெற்றி கட்டாயத்தில் இன்று அடிலெய்டில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 184 ரன்களை குவித்து, வங்கதேசத்தை 15 ஓவரில் 145 ரன்களுக்கு கட்டுப்படுத்தி டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி மிக பரபரப்பாக இருந்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கேஎல் ராகுல் (32 பந்தில் 50 ரன்கள்) மற்றும் விராட் கோலியின்(44 பந்தில் 64 ரன்கள்) அதிரடி அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் கேமியோவால்(16 பந்தில் 30 ரன்கள்) 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.

185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது அதிரடியால் 7 ஒவரில் 66 ரன்களை குவித்தது வங்கதேச அணி. அப்போது மழை குறுக்கிட்டதால் 15 ஓவரில் டி.எல்.எஸ் முறைப்படி 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழைக்கு பின் வங்கதேச பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டாய் சரிந்தது. 27 பந்தில் 60 ரன்கள் அடித்த லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட்டாக்க, அதன்பின்னர் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 15 ஓவரில் 145 ரன்கள் அடித்து வங்கதேச அணி தோற்றது.

டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ

இந்த போட்டியில் இந்திய அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிய வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, நாங்கள்(வங்கதேசம்) உலக கோப்பையை வெல்வதற்காக வரவில்லை. இந்தியா தான் உலக கோப்பையை வெல்ல வந்திருக்கிறது. எனவே இந்தியாவை வீழ்த்தி அது அந்த அணிக்கு பெரிய அப்செட்டாக அமையும் என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார்.

இந்தியாவை வீழ்த்தும் நோக்கத்துடன் களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், வங்கதேச அணியின் நம்பர் 1 பவுலரான டஸ்கின் அகமதுவின் மொத்த 4 ஓவர் ஸ்பெல்லையும் 7 ஓவர்களுக்குள்ளாகவே கொடுத்து முடித்துவிட்டார் கேப்டன் ஷகிப் அல் ஹசன். டெத் ஓவருக்கென்று ஒரு ஓவர் கூட பதுக்காமல், அணியின் நம்பர் 1 பவுலருக்கு தொடர்ச்சியாக ஷகிப் 4 ஓவர்கள் கொடுத்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..! முதலிடத்தில் கோலி.. வெறித்தனமா விரட்டும் ரோஹித்

போட்டிக்கு பின் அதுகுறித்து பேசிய ஷகிப் அல் ஹசன், இந்திய அணியின் டாப் 4 பேட்டிங் ஆர்டர் அபாயகரமானது. எனவே அந்த டாப் 4 வீரர்களையும் தூக்க டஸ்கின் அகமதுவை முழுமையாக பயன்படுத்துவதுதான் எங்கள் திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர் விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால் ரன் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினார் என்று ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார்.

click me!