சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாருக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஷாருக் கான். கடந்த 1995 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிறந்துள்ளார். தற்போது துபாயில் நடந்து வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதில், ரூ.40 லட்சத்தை தனது அடிப்படை விலையாக நிர்ண்யித்திருந்தார். இந்த நிலையில், கடுமையான போட்டிகளுக்கு நடுவில் ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.5.25 கோடிக்கு தமிழக வீரரான ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ.9 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஷாருக் கான் 14 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பேட் கம்மின்ஸை ஓவர்டேக் செய்து வரலாற்றை மாற்றி அமைத்து ரூ.24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்!
இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஷாருக் கான் மொத்தமாக 33 போட்டிகளில் 31 இன்னிங்ஸ் விளையாடி 426 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் குஜராத் டைட்டன்ஸ் அணி வரையில் தமிழக வீரரான ஷாருக் கானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
IPL 2024 Auction: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.20.50 கோடிக்கு விலை போன பேட் கம்மின்ஸ்!
ஆனால், பஞ்சாப் அணியே ஷாருக் கானை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டி போட்டது. ஆனால், கடைசியாக போட்டியிலிருந்து பஞ்சாப் பின்வாங்கியதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு ஷாருக் கானை ஏலம் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
ஸ்பென்சர் ஜான்சன் – ஆஸ்திரேலியா – பவுலர் – ரூ.10 கோடி
ஷாருக் கான் – இந்தியா – ஆல்ரவுண்டர் – ரூ.7.40 கோடி
உமேஷ் யாதவ் – இந்தியா – பவுலர் – ரூ.5.80 கோடி
சுஷாந்த் மிஸ்ரா – இந்தியா - பவுலர் – ரூ.2.20 கோடி
கார்த்திக் தியாகி – இந்தியா – பவுலர் – ரூ.60 லட்சம்
அஷ்மதுல்லா உமர்சாய் – ஆப்கானிஸ்தான் – ஆல்ரவுண்டர் – ரூ.50 லட்சம்
மானவ் சுதர் – இந்தியா – பவுலர் – ரூ.20 லட்சம்
IPL Auction 2024, Dubai: ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூரை தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!