வங்கதேச அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி முதல் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வங்கதேச அணியைப் பொறுத்த வரையில் தவ்ஹீத் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் – டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இமாம் உல் ஹக், ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, ஃபகர் ஜமான், அகா சல்மான் மற்றும் உசாமா மிர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஷாகீன் அஃப்ரிடி வீசினார். அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 5ஆவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் தன்ஷித் ஹசன் ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!
இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஷாகீன் அஃப்ரிடி படைத்துள்ளார். இதில் 51 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேபாள் வீரர் சந்தீப் லமிச்சனே 42 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
இதே போன்று ரஷீத் கான் 44 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மிட்செல் ஸ்டார் 51 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.