பாகிஸ்தானுக்கு எதிரான 31 ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசல் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வங்கதேச அணியில் தவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மஹெதி ஹசன் நிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இமாம் உல் ஹக், ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, ஃபகர் ஜமான், அகா சல்மான் மற்றும் உசாமா மிர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!
வங்கதேசம்:
லிட்டன் தாஸ், தன்ஷித் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), முகமதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிடி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஷ்தாபிஜூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், பாபர் அசாம் (கீப்பர்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், ஷகீன் அஃப்ரிடி, உசாமா மிர்ட், முகமது வாசீம் ஜூர், ஹரிஷ் ராஃப்.
IND vs ENG: 5ஆவது முறையாக 1000 ரன்களை கடந்த சாதனை மன்னன் ஹிட்மேன் ரோகித் சர்மா!
இதுவரையில் இரு அணிகளும் 38 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 33 போட்டிகளில் பாகிஸ்தானும், 5 போட்டிகளில் வங்கதேசம் அணியும் வெற்றி பெற்றுள்ளன. முந்தைய முடிவுகளின் படி இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று வங்கதேச அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.