ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை 18ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அஃப்டிரி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், நியூசிலாந்து மற்றும் இந்தியா மட்டும் விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 367 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை எடுத்த அதே ஓவரில், கிளென் மேக்ஸ்வெல்லையும் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும், இதுவரையில் 2 முறை உலகக் கோப்பை போட்டிகளில் ஷாகீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை 5 விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் ஷாகித் அஃப்ரிடி முதல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக மாமனாரான ஷாகித் அப்ரிடி சாதனையை ஷாகீன் அஃப்ரிடி சமன் செய்துள்ளார். இதுவரையில் பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இன்னும் 5 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினால், இந்த உலகக் கோப்பையில் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை சமன் செய்துவிடுவார்.