கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஷாருக்கான் பொதுவெளியில் புகைபிடித்து கேமராவில் மாட்டிக் கொண்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
There's no doubt why looks so old. When you smoke so much, you're bound to look like you're 70 at the age of 50. Russell pic.twitter.com/hOO69amZob
— Sandeep Pathak (@Iam_SPathak)
இதில், நரைன் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களில் நடராஜன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதே ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அதன் பின் வந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பிலிப் சால்ட் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று ராமன்தீப் சிங்கும் 17 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 35 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியாக ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இருவரும் இணைந்தனர். இதில் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு விளையாடிய ஆண்ட்ரே ரஸல் சன்ரைசர்ஸ் பவுலர்களை திணற வைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். வரிசையாக சிகஸரும், பவுண்டரியுமாக விளாசித் தள்ளினார். ஒரு கட்டத்தில் 13.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அதன் பிறகு கிட்டத்தட்ட 6 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார். இதற்கு தனது முத்தத்தை ஷாருக்கான் பரிசாக கொடுத்துள்ளார். தொடர்ந்து விளையாடிய ரஸல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில், 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் ரிங்கு சிங் 23 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்துள்ளார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷாருக்கான் தனது அறைக்கு சென்று புகைப்பிடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஷாருக்கான் ஸ்மோக் பண்ணும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Shameless Sharukh Khan smoking on National Television .
That's why there is only one king in this world and that is Virat Kohli. pic.twitter.com/8HGjeTblYG