டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 185 ரன்களை குவித்து, 186 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று ஆடிவருகின்றன.
தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதேவேளையில், அரையிறுதிக்கான அரிதினும் அரிதான கொஞ்சநஞ்ச வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இறங்கியது. எனவே இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் களமிறங்கின.
சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய ஃபகர் ஜமானுக்கு பதிலாக முகமது ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இவர்தான் நமது அடுத்த பும்ரா.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா மாபெரும் புகழாரம்
தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செம ஃபார்மில் இருக்கும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் ஆடுகிறார். கேஷவ் மஹராஜுக்கு பதிலாக டப்ரைஸ் ஷம்ஸி ஆடுகிறார்.
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான்(4) மற்றும் பாபர் அசாம்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பாபர் அசாம் 15 பந்தில் 6 ரன் அடித்து அணியின் ஸ்கோர் வேகத்தையும் கெடுத்துவிட்டு சென்றார். ஷான் மசூத்தும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஃபகர் ஜமானுக்கு பதிலாக ஆடிய முகமது ஹாரிஸ், 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை விரைவில் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் 11 பந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பயத்தை காட்டிவிட்டுத்தான் சென்றார். அதன்பின்னர் இஃப்டிகார் அகமது பொறுப்புடன் நிலைத்து நின்று ஆட, நவாஸ் 22 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இஃப்டிகார் ஒருமுனையில் பொறுப்புடன் ஆட, மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஷதாப் கான் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 2வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஷதாப் கான். ஷோயப் மாலிக் 18 பந்தில் அடித்த அரைசதமே பாகிஸ்தான் வீரர் அடித்த அதிவேக அரைசதம். 20 பந்தில் அரைசதம் அடித்த ஷதாப் கான், 2ம் இடம்பிடித்து சாதனை படைத்தார்.
டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ
இஃப்டிகார் அகமதுவும் அரைசதம் அடித்தார். இஃப்டிகார் அகமது 35 பந்தில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்தில் 52 ரன்களும் விளாச 20 ஓவரில் 185 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.