இவர்தான் நமது அடுத்த பும்ரா.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா மாபெரும் புகழாரம்

By karthikeyan V  |  First Published Nov 2, 2022, 8:01 PM IST

டி20 உலக கோப்பையில் பும்ராவின் இடத்தை நிரப்பியிருப்பது அர்ஷ்தீப் சிங் தான் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பர் 1 ஃபாஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனெனில் பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் அபாரமாக பந்துவீசி, அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுக்கவல்ல பவுலர் பும்ரா.

புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய 2 சீனியர் பவுலர்களும் பவர்ப்ளேயில் புதிய பந்தில் அபாரமாக வீசக்கூடியவர்கள். ஆனால் பும்ரா ஆடாததால் டெத் பவுலிங் பெரும் கவலையாகவே இருந்தது. ஆனால் பும்ரா இல்லாதது எதிர்பார்த்த அளவிற்கு பாதிப்பாக அமையாமல் பார்த்துக்கொண்டார் அர்ஷ்தீப் சிங்.

Tap to resize

Latest Videos

இந்தியாவிற்கு எதிராக விசித்திரமான செயல்பாடு..! வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கம்

இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங், நல்ல வேரியேஷனில் வீசுவதால் டெத் ஓவர்களில் பெரிய பேட்ஸ்மேன்களை கூட அடிக்கவிடாமல் தடுக்கிறார். சாமர்த்தியமான சமயோசித பவுலிங்கால் டெத் ஓவர்களை அருமையாக வீசி இந்தியாவின் கவலையை நீக்கி நம்பிக்கையளிக்கிறார். 

இந்திய அணி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றதால் அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிட்ட இந்திய அணி, கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்வதால் அந்த போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

வங்கதேசத்துக்கு எதிராக இன்று அடிலெய்டில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 184 ரன்களை குவித்த இந்திய அணி, மழையால் 16 ஓவரில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட வங்கதேச அணியை 145 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 5 ரன் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மழை.. மழையின் உதவியுடன் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு கால் வைத்த இந்தியா

2வது இன்னிங்ஸ் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் ஒரு பவுலர் மட்டுமே 4 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட்டார். கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகிய 2 சீனியர் பவுலர்களுக்கு இருந்தபோதிலும், கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் கொடுத்தார் கேப்டன் ரோஹித். கேப்டன் நம்பிக்கையை மோசம் செய்யாத அர்ஷ்தீப், கடைசி ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதற்கு முந்தைய முக்கியமான ஓவர்களான 14 ஓவரில் 12 ரன்களும், 12வது ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.

டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ

போட்டிக்கு பின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் கொடுத்தது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டெத் ஓவர் தான் அர்ஷ்தீப் சிங்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமை. பும்ரா இல்லாத நிலையில், யாராவது ஒரு பவுலர் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கிற்கு பும்ராவின் இடத்தை நிரப்பி அவரது பணியை செய்வது சாதாரண விஷயமல்ல. ஆனால் அவரை அதற்காகவே தயார்படுத்தியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக அவரும் டெத் ஓவர்களை அருமையாக வீசியிருக்கிறார். ஷமி - அர்ஷ்தீப் இருவரில் ஒருவரிடம் கடைசி ஓவரை கொடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அர்ஷ்தீப் அந்த பணியை செய்துவருவதால் அவரிடம் கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது என்றார் கேப்டன் ரோஹித் சர்மா.
 

click me!