டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 என இரு க்ரூப்களிலும் அணிகள் கடுமையாக போட்டியிட்டுவருகின்றன.
க்ரூப் 1ல் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது. இந்த 3 அணிகளில் 2 அணிகள் தான் க்ரூப் 1லிருந்து அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் 3 வலுவான அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
undefined
இவர்தான் நமது அடுத்த பும்ரா.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா மாபெரும் புகழாரம்
க்ரூப் 2ல் இந்திய அணி 6 புள்ளிகளுடன் ஒரு காலை அரையிறுதியில் வைத்துவிட்டது. கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த போட்டியிலும் ஜெயித்துவிடும் என்பதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.
க்ரூப் 2லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற தென்னாப்பிரிக்காவிற்கு அதிக வாய்ப்பிருந்தாலும், பாகிஸ்தானுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகளில் ஆடி 5 புள்ளிகளையும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் ஆடி 2 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டி மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்றால் 6 புள்ளிகளை பெறும். தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் தோற்றாலும் கூட, நெதர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் ஜெயித்தால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
எனவே தென்னாப்பிரிக்கா அணிக்குத்தான் அரையிறுதி வாய்ப்பு அதிகமுள்ளது. எனினும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தான் இரு அணிகளுமே களமிறங்குகின்றன. தென்னாப்பிரிக்காவைவிட பாகிஸ்தானுக்கே இது முக்கியமான போட்டி.
சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய ஃபகர் ஜமானுக்கு பதிலாக முகமது ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செம ஃபார்மில் இருக்கும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் ஆடுகிறார். கேஷவ் மஹராஜுக்கு பதிலாக டப்ரைஸ் ஷம்ஸி ஆடுகிறார்.
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.
டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.