தோனி கேப்டன்சி வேற லெவல்.. அவரு அளவுக்குலாம் கோலி வரமுடியாது.. சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 12:13 PM IST
Highlights

தோனியின் கேப்டன்சியுடன் ஒப்பிட்டு, தற்போதைய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை சாடியுள்ளார் சேவாக்.
 

தோனியின் கேப்டன்சியில் நீண்ட காலம் ஆடிய வீரர்களில் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கும் ஒருவர். சேவாக்குக்கும் தோனிக்கும் இடையே, அவர்கள் இணைந்து ஆடிய காலத்திலேயே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் தோனியின் கேப்டன்சியில் சேவாக் நிறைய போட்டிகளில், அவருடன் இணைந்து ஆடியுள்ளார். அதனால் தோனியின் கேப்டன்சி அணுகுமுறை குறித்து சேவாக் நன்கு அறிவார். 

Also Read - அண்டர் 19 உலக கோப்பையில் விக்கெட்டே போகாமல் அபார வெற்றி பெற்ற இந்தியா.. மொத்த மேட்ச்சும் 28 ஓவரில் முடிஞ்சுபோச்சு

இந்நிலையில், தோனியின் கேப்டன்சியுடன் ஒப்பிட்டு, தற்போதைய இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை சேவாக் கடுமையாக சாடியுள்ளார். கேப்டன் விராட் கோலி - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அடங்கிய தற்போதைய இந்திய அணி நிர்வாகம், இளம் வீரர்களுக்கு அவர்களது திறமையை நிரூபிக்க ஏதுவாக தொடர் வாய்ப்புகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் உள்ளது. உலக கோப்பைக்கு முன், நான்காம் வரிசை பேட்ஸ்மேனை தேடும் படலத்தில், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவில்லை. 

இந்திய அணியின் நான்காம் வரிசை வீரராக உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி செய்யப்பட்ட நிலையில், தவானும் காயத்திலிருந்து மீண்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் ராகுலை நீக்கமுடியாது என்பதால், அந்த தொடரில் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் இறக்கப்பட்டார் ராகுல். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மூன்றாம் வரிசையிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையிலும் மூன்றாவது போட்டியில் தொடக்க வீரராகவும் இறக்கப்பட்டார். அணி நிர்வாகம், எந்த பேட்டிங் ஆர்டரில் ஆடவைத்தாலும், அந்த வரிசையில் இறங்கி, தன் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நியாயம் செய்கிறார் ராகுல். 

ஆனால் எந்த வரிசையிலும் ஆடும் திறன் வாய்ந்த ராகுலின் இடமே இந்திய அணியில் சந்தேகமானதுதான் என்று சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக், கேஎல் ராகுல் ஐந்தாம் வரிசையில், நான்கு முறை சரியாக ஆடவில்லை என்றால், தற்போதைய அணி நிர்வாகம் அவரை அணியிலிருந்து நீக்கிவிடும். ஆனால் தோனியின் கேப்டன்சியில் இப்படியெல்லாம் இல்லை. வீரர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களது திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அதில் உறுதியாக இருந்தவர் தோனி. எந்தெந்த வீரர்களை எந்தெந்த வரிசையில் இறக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் தோனி.  

Also Read - இனிமேல் உங்களை நம்பி பிரயோஜனமில்ல.. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்

இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவும் வாய்ப்பும் அளித்து வளர்த்தெடுத்தார் தோனி. அதனால்தான் இந்திய கிரிக்கெட் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களால் எளிதில் திறமையை நிரூபித்துவிட முடியும். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் ஆதரவு இருக்க வேண்டும். கேப்டன் போதுமான அளவிற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஆதரித்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.  
 

click me!