ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி

By karthikeyan V  |  First Published Feb 19, 2023, 11:59 AM IST

ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி.
 


ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. பெங்கால் - சௌராஷ்டிரா அணிகள் இடையேயான ஃபைனலில் டாஸ் வென்ற  சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சௌராஷ்டிரா அணி:

Tap to resize

Latest Videos

ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), ஜெய் கோஹில், விஷ்வராஜ் ஜடேஜா, ஷெல்டான் ஜாக்சன், அர்பிட் வசவடா, சிராக் ஜானி, பிரெராக் மன்கத், பார்ட் புட், தர்மேந்திரசின் ஜடேஜா, ஜெய்தேவ் உனாத்கத் (கேப்டன்), சேத்தன் சகாரியா.

இவரை விட்டால் இந்தியாவில் வேற திறமையான வீரரே இல்லையா..? கேஎல் ராகுல் தேர்வை கடுமையாக விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

பெங்கால் அணி:

அபிமன்யூ ஈஸ்வரன், சுமந்தா குப்தா, சுதிப் குமர் கராமி, அனுஸ்துப் மஜும்தர், மனோஜ் திவாரி (கேப்டன்), ஷபாஸ் அகமது, அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப், ஆகாஷ் கட்டாக், இஷான் போரெல், முகேஷ் குமார்.

முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 69 ரன்களும், அசோக் போரெல் 50 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. சௌராஷ்டிரா அணியில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. சௌராஷ்டிரா அணியில், ஹர்விக் தேசாய்(50), ஷெல்டான் ஜாக்சன்(59), அர்பிட் வசவடா(81), சிராக் ஜானி(60) ஆகியோர் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்களும் பங்களிப்பு செய்ததால் சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது.

மகளிர் டி20 உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனாவின் போராட்ட அரைசதம் வீண்..! இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

230 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணி 241 ரன்கள் அடித்தது. வெறும் 11 ரன்கள் மட்டுமே பெங்கால் முன்னிலை பெற, 12 ரன்கள் என்ற இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி 2வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. கடந்த சீசனில் டைட்டில் வென்றிருந்த நடப்பு சாம்பியன் சௌராஷ்டிரா அணி, தொடர்ச்சியாக 2வது முறை ரஞ்சி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
 

click me!