உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று சொல்லப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கில் பல பில்லியன் டாலர் பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ மூலமாக ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை சாம்பியனாகியுள்ளன. வரும் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது ஐபிஎல் சீசனுக்காக ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாள்: முதல் முறையாக உலகக் கோப்பையில் ஓமன்!
இதையடுத்து வரும் மார்ச் முதல் மே வரையில் ஐபிஎல் 17ஆவது சீசன் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரின் பல பில்லியன் டாலர் பங்குகள வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிக்கிறது. அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் ஐபிஎல்லை 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து இந்திய அரசு அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்காக கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா இளவரசர் இந்தியா வந்தபோது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்திய பவுலர்களுக்கு ஐசிசி வித்தியாசமான பந்துகளை வழங்குகிறது – ஹசன் ராசா குற்றச்சாட்டு!
இதில் ஐபிஎல்லில் 5 பில்லிய டாலர் முதலீடு செய்வதற்கும், மற்ற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்வதற்கு உதவுவதற்கும் அரசு முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஐபிஎல் ஏற்கனவே அரம்கோ மற்றும் சவுதி சுற்றுலா ஆணையம் உட்பட ஏராளமான ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.