இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற சர்ஃப்ராஸ் கான் பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த நிலையில் 2ஆவது போட்டியில் இடம் பெறவில்லை.
சிக்ஸர் அடித்து சதம் – சொந்த மண்ணில் முதல் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
அவர்களுக்குப் பதிலாக சர்ஃப்ராஸ் கான், ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சர்ஃபராஸ் கான், பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை. மேலும், ரஜத் படிதார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர், இன்றைய போட்டியில் களமிறங்கி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
2ஆவது போட்டிக்கு பிறகு மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்பினால் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு அவ்வளவு தான். அவரை அணி நிர்வாகமானது பேருக்கு மட்டுமே அணியில் எடுத்து வைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கப் பெற்று பிளேயிங் 11ல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இதே நிலை தான் தற்போது சர்ஃபராஸ் கானுக்கு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று சதம் சதமாக விளாசி வந்த சர்ஃப்ராஸ் கான் இந்திய அணியில் இடம் பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சர்ஃபராஸ் கான் 45 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 இன்னிங்ஸ்களில் 3912 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 70. தற்போது 30 வயதாகும் ரஜத் படிதார் 55 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 93 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், இவரது பேட்டிங் சராசரி 46 மட்டுமே.
குறைந்த பேட்டிங் சராசரி கொண்ட ரஜத் படிதார் எப்படி அணியில் சேர்க்கப்பட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறுமா?