சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்திருப்பது போன்ற போலியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடந்து வந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 12ஆம் தேதி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் தான் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போலியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுப்மன் கில் விளையாடும் போட்டிகளில் எல்லாம் சாரா டெண்டுல்கர் இடம் பெற்றிருப்பது இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதில், சுப்மன் கில் அரைசதம் அடிக்கும் போதும் சரி, பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் போதும் சரி, எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பதை நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்திருப்போம்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் நெருங்கி நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சிலர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், அந்த புகைப்படமானது அர்ஜூன் டெண்டுல்கர் பிறந்தநாளன்று சாரா டெண்டுல்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம். அதில் அர்ஜூன் முகத்திற்கு பதிலாக சுப்மன் கில் முகத்தை மட்டும் மாற்றி வைத்து போலியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஐசிசி வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் சுப்மன் கில் முதலிடம் பிடித்திருந்தார். இந்தநிலையில், சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மன் கில் இருவரும் நெருங்கி நிற்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து 1258 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய கிங் கோலி!