தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முதல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியின் மூலமாக ரஜத் படிதார் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ரஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், சாய் சுதர்சன் 10 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ரஜத் படிதார் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
கேஎல் ராகுல் 21 ரன்களில் வெளியேறியதைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கி பொறுமையாக விளையாடினார். அவர் 30 ரன்களில் 7 ரன்கள் என்று நிதானமாக விளையாடி கடைசியாக ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதம் அடித்தார். அவர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிங்கு சிங் களமிறங்கினார். ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 110 பந்துகளில் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார்.
IPL Auction 2024: முதல் ஏலத்திலேயே குளறுபடியா? பஞ்சாப் கிங்ஸை ஏமாற்றிய மல்லிகா சாகர்?
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 86* ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், மொத்தமாக 391 ரன்கள் குவித்தார். இதில், 3 அரைசதங்கள் அடங்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வரவில்லை. 2ஆவது ஒருநாள் போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கடைசியாக சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்து சஞ்சு சாம்சன் சாதனை! pic.twitter.com/1S6CcCz8na
— Asianetnews Tamil (@AsianetNewsTM)