இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்றும் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்று சமனில் உள்ளான.
இந்த நிலையில் தான் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பார்ல் பகுதியில் உள்ள போலண்ட் பார்க்கில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரஜத் பட்டிதார் இன்றைய போட்டியின் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்.
விரலில் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதார் விளையடுகிறார். மேலும், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.