TNPL 2022: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மோசமான பேட்டிங்.. திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எளிய இலக்கு

Published : Jul 24, 2022, 09:12 PM IST
TNPL 2022: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மோசமான பேட்டிங்.. திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எளிய இலக்கு

சுருக்கம்

திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவரில் வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை திண்டுக்கல் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி:

எஸ் அபிஷேக், கோபிநாத், டேரைல் ஃபெராரியோ, ஆர் கவின் (விக்கெட் கீப்பர்), ரவி கார்த்திகேயன், ராஜேந்திரன் கார்த்திகேயன், ப்ரனவ் குமார், முருகன் அஷ்வின் (கேப்டன்), எஸ் பூபாலன், லோகேஷ் ராஜ்,  ஜி பெரியசாமி.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணிபாரதி (விக்கெட் கீப்பர்), விமல் குமார், கே முகுந்த், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், ஆர் விவேக், வி.பி.திரன், அத்வைத் ஷர்மா, கிஷான் குமார், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், எம் சிலம்பரசன்.

முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி வீரர்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். ஃபெராரியோ மட்டும் தான் 38 ரன்கள் அடித்தார். அவரும் 36 பந்தில் 38 ரன்கள் தான் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அந்த அணி 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. ப்ரணவ் 15 பந்தில் 23 ரன்கள் அடித்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய ஆர் விவேக் மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!