டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து கௌசிக் காந்தி சாதனை!

By Rsiva kumar  |  First Published Jun 19, 2023, 10:45 AM IST

சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் வீரர் கௌசிக் காந்தி டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பா11சி திருச்சி அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதையடுத்து கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் களமிறங்கினர். இதில், இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

2ஆவது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ்: பாபா இந்திரஜித் அதிரடியால் திண்டுக்கல் வின்!

Tap to resize

Latest Videos

பிரான்சிஸ் ரோகின்ஸ் மற்றும் மணி பாரதி இருவரும் நிலைத்து நின்று ஆடினர். எனினும், ரோகின்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மணி பாரதி மட்டும் பொறுமையாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே, பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்தது.

சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!

இதையடுத்து 140 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடியது. இதில், விக்கெட் கீப்பர் அமித் சாத்விக் 22 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஆகாஷ் சும்ரா 10 ரன்களும், மானா பஃப்னா 16 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த கௌசிக் காந்தி சிறப்பாக ஆடி 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 52 ரன்கள் எடுத்துக் கொடுக்க சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஒரேயோரு இன்ஸ்டா போஸ்டுக்கு ரூ.8.9 கோடி, டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி!

இந்தப் போட்டியின் மூலமாக கௌசிக் காந்தி டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நடந்த போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியிருந்தார். ஆனால், தற்போது மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார். திருச்சி அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

சீகம் மதுரை பாந்தர்ஸ்க்கு எதிரான போட்டி: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!

click me!