சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!

Published : Jun 18, 2023, 09:31 PM IST
சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!

சுருக்கம்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஒரேயோரு இன்ஸ்டா போஸ்டுக்கு ரூ.8.9 கோடி, டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி!

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ஷிவன் சிங், விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், பி சரவணக் குமார், எஸ் அருண், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சி சரத் குமார்.

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், எஸ் ஸ்ரீ அபிஷேக், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன், தேவ் ராகுல், குர்ஜாப்னீத் சிங்

சீகம் மதுரை பாந்தர்ஸ்க்கு எதிரான போட்டி: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!

அதன்படி முதலில் ஆடிய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், ஜெகதீசன் கௌசிக் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

அபிஷேக் தன்வரின் அபாரமான பௌலிங்; கௌசிக் காந்தியின் அரைசதம்: சேலம் ஸ்பார்டன்ஸ் சிம்பிள் வெற்றி!

பந்து வீச்சு தரப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுபோத் குமார் பதி மற்றும் சரவணக் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, அஸ்வின் மற்றும் மதிவாணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.

ஒரு பந்துக்கு 18 ரன்கள், ஒரு போட்டியில் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் 3 விக்கெட், 9 ரன் கொடுத்த அபிஷேக் தன்வர்!

இதற்கு முன்னதாக நடந்த பா11சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஒரே பந்தில் பேட்ஸ்மேனும், பௌலரும் மாறி மாறி டிஆர்எஸ் கேட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில், நாட் அவுட் மட்டுமே இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?