ஒரேயொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலியின் மொத்த நிகர வருமானம் ரூ.1050 கோடி ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சச்சினுக்கு அடுத்து ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். உலகின் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவராகவும் இருக்கிறார். விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கார், பைக், வீடு, ஐபிஎல் வருமானம், பிசிசிஐ ஒப்பந்தம் ஆகியவற்றையும் தாண்டி விராட் கோலி இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் டுவிட்டர் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டுகிறார்.
சீகம் மதுரை பாந்தர்ஸ்க்கு எதிரான போட்டி: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!
ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக விராட் கோலி ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதுமட்டுமின்றி ஒரே ஒரு டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈடுகிறார். இது தவிர மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடும், ஹரியானாவில் குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்திருக்கிறார். மேலும், ரூ.31 கோடிக்கும் அதிகளவில் விலை உயர்ந்த ஏராளமான கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.
அபிஷேக் தன்வரின் அபாரமான பௌலிங்; கௌசிக் காந்தியின் அரைசதம்: சேலம் ஸ்பார்டன்ஸ் சிம்பிள் வெற்றி!
மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், வாலினி, வீவோ, அமெரிக்கன் டூரிஸ்டர், நாய்ஸ், சிந்தால், எம்.ஆர்.எஃப், ஊபர், மைந்த்ரா, டூத்சி, கிரேட் லேர்னிங், புளூ ஸ்டார், ஹெச்.எஸ்.பி.சி, வ்ரான், ஃபையர் போல்ட், லுக்ஷர் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிறுவனங்களின் மூலமாக ஒரு நாளுக்கு மட்டும் ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். மேலும், கால்பந்து கிளப் அணி, ப்ரோ ரெஸ்லிங், டென்னிஸ் அணி ஆகிய விளையாட்டில் முதலீடு செய்து இதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார்.
இப்படி ஒவ்வொன்றின் மூலமாக விராட் கோலி ஆண்டுக்கு ரூ.1050 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Cover pic of Stock Gro - Virat Kohli, Indian Cricket GOAT. pic.twitter.com/HiCcdKcNmg
— Johns. (@CricCrazyJohns)