ஒரு பந்துக்கு 18 ரன் கொடுத்த அபிஷேக் தன்வார் தான் இன்று ஒரு மெய்டன் உள்பட 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
பா11சி திருச்சி மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது லீக் போட்டி தற்போது திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி திருச்சி அணியில் விக்கெட் கீப்பர் மணி பாரதி மட்டும் பொறுமையாக நின்று ஆடி 40 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து டேரில் பெர்ராரிரோ 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மணி பாரதி எடுத்த 40: பா11சி திருச்சி 139 ரன்கள் குவிப்பு!
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே பா11சி திருச்சி அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சு தரப்பில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் ஓவர் உள்பட 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் தான் வீசினார். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கொடுத்துள்ளார். இதில் 4 நோபால், ஒரு வைடு உள்பட கடைசி பந்தில் மட்டுமே அவர் 18 ரன்கள் கொடுத்து மோசமான சாதனை படைத்திருந்தார். மேலும், 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.
ஆனால், இன்றைய போட்டியில், தொடக்க வீரர் ஜாஃபர் ஜமால், டேரில் பெராரிரோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ரூ.7 லட்சத்திற்கு புதிதாக வாட்ச் வாங்கிய விராட் கோலி: வைரலாகும் இன்ஸ்டா பிக்ஸ்!