பல நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் சச்சின் டெண்டுல்கர், ஃபர்ஸ்ட் கிரே என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முதலீட்டால் சச்சினுக்கு 10 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள் பல நிறுனங்களில் முதலீடு செய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பல நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டுகின்றனர். இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்த நிறுவனத்தின் மூலமாக நஷ்டத்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எம்பாப்பேயின் அசர வைக்கும் சம்பளம்: கோலி, ரோகித்தை மிஞ்சிய சாதனை!
அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க. சச்சின் டெண்டுல்கர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். அந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு ஐபிஓக்களை வெளியிட்டு வருகின்றது. அப்படி ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று ஃபர்ஸ்ட் கிரே. இந்நிறுவனம் குழந்தைக்கு தேவையானவற்றை விற்பனை செய்து வந்தது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் தான் சச்சின் முதலீடு செய்திருக்கிறார். இந்நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கருக்கு 10 சதவிகிதம் நஷ்டம் ஏற்படப் போகிறது. கிரே நிறுவனத்தில் சச்சின் ரூ.487.44 கொடுத்து ஒரு பங்கை வாங்கியிருந்தார். ஆனால், இந்நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.440 முதல் ரூ.465 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சச்சினுக்கு 10 சதவிகிதம் நஷ்டம் ஏற்படப் போகிறது. ஆனால், கிரே தங்களது பங்குகளை ஐபிஓவில் விற்கப் போவதில்லை என்று சச்சின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?