இந்தியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 3-0 என்று தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஜெயிக்க வேண்டிய முதல் போட்டியானது டையில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது கொழும்புவில் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் மற்றும் ரியான் பராக் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கியது. இந்தப் போட்டியில் ரியான் பராக் அறிமுகம் செய்யப்பட்டார்.
இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் குவித்தது. நிசாங்கா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அவிஷா 102 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!
அதன் பிறகு குசால் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில், அசலங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த சதீரா சமரவிக்ரமா 0 ரன்னில் நடையை கட்டினார். ஜனித் லியானகே 8 ரன்னிலும், துணித் வெல்லாலகே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் குசால் மெண்டிஸ் 59 ரன்களில் நடையை கட்டினார்.
போட்டியின் 49ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய கடைசி பந்தில் மகீஷ் தீக்ஷனா இறங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து ரிஷப் பண்ட் கைக்கு சென்றது. அவர், மெதுவாக ஸ்டெம்பிங் செய்ய, அதற்குள்ளாக தீக்ஷனா கிரீஷிற்குள் வந்துவிட்டார். முதலில் அவுட் என்று தீக்ஷனா நடையை கட்ட, அதன் பிறகு திரும்பி வந்தார். ஆனால், டிவி ரீப்ளேயில் முதலில் அவுட் என்று வர அதன் பிறகு நாட் அவுட் என்று காட்டப்பட்டது.
இதை மட்டும் செய்திருந்தால் போதும் – வினேஷ் போகத் தகுதி பெற்றிருப்பார்?
இறுதியாக இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முதல் விக்கெட்டை அக்ஷர் படேல் எடுத்தார். ரியான் பராக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.