உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 50ஆவது சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து விராட் கோலியை கட்டியணைத்து சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதலில் பேட்டிங் செய்தனர். இறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!
அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார். அவர் நிதானமாக விளையாடியதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மைதானத்திற்கு தூது அனுப்பவே அதன் பிறகு அதிரடியாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்த நிலையில், அதனை சதமாகவும் மாற்றினார். விராட் கோலி 106 பந்துகளில் ஒரு நாள் போட்டிகளில் 50ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சச்சின் 49 சதங்களுடன் 2ஆவது இடமும், ரோகித் சர்மா 31 சதங்களுடன் 3ஆவது இடமும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 4ஆவது இடமும், ஜெயசூர்யா 28 சதங்களுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர். கடைசியாக விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 113 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 117 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 7 சதங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா மற்றும் விராட் கோலி ஆகியோர் 5 சதங்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளனர்.
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக அதிக முறை 50-க்கும் அதிகமாக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 5 முறை (2019) 50க்கும் அதிகமாக ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் (1996 மற்றும் 2003) ஆகிய ஆண்டுகளில் 4 முறை 50க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 4 முறை இந்த உலகக் கோப்பை தொடரில் ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில், போட்டிக்குப் பிறகு விராட் கோலியை கட்டியணைத்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விராட் கோலி சதம் அடிக்கவும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா பறக்கும் முத்தம் கொடுத்து பாராட்டினார்.