நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் முதலில் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 51 சிக்ஸார்கள் அடித்ததன் மூலமாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!
இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். அதன் பிறகு ரோகித் சர்மா தூது சொல்லி அனுப்பிய பிறகு அதிரடியாக விளையாடினார். அதன் பிறகு அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்தப் போட்டியில் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 8ஆவது முறையாக 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 217 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 264 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். குமார் சங்கக்காரா 216 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் மொத்தமாக 594 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்திருந்தார்.
Shubman Gill Retired Hurt: காயம் காரணமாக ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறிய சுப்மன் கில்!
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
Most runs in a single World Cup edition:
674* - விராட் கோலி (2023)
673 – சச்சின் டெண்டுல்கர் (2003)
659 – மேத்யூ ஹைடன் (2007)
648 – ரோகித் சர்மா (2019)
647 – டேவிட் வார்னர் (2019)
இது ஒரு புறம் இருக்க ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து 50 ஆவது சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மைதானத்தில் கூடியிருந்த சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் முன்பு இந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்