தந்தையின் நினைவாக புதிய பள்ளிக்கூடம்: 2300 குழந்தைகளுக்கு இலவச கல்வி!

By Rsiva kumar  |  First Published May 3, 2023, 2:42 PM IST

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பில் 2300 ஏழை குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் இலவச கல்வி வழங்கும் வகையில் புதிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.


கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். சமூகத்தின் முழு பகுதியிலும் மதிக்கப்படும் ஒருவராக திகழ்கிறார். சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்தி மொழி நாவலாசிரியர் மற்றும் கவிஞர். 

ஒற்றை காலால் உடற்பயிற்சி செய்யும் கேன் வில்லியம்சன் குணமடைய விராட் கோலி வாழ்த்து!

Latest Videos

சச்சின் டெண்டுல்கர், 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் வரையில் குவித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை (STF) சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் சந்தல்பூர் பகுதியில் ஒரு பள்ளியைக் கட்டியுள்ளது.

தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லக்னோ வீரர்; சிக்கலில் இந்தியா டெஸ்ட் டீம்!

இது மத்தியப்பிரதேசத்திலுள்ள காடேகான் தெஹ்சில் என்ற இடத்திலுள்ள ஒரு தொலை தூர கிராமம். இது உஜ்ஜையின் பிரிவுக்கு சொந்தமானது. அதுமட்டுமின்றி இது தேவாஸிலிருந்து 1125 கிமீ தொலைவில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் கல்வியறிவு என்பது 56.6 சதவிகிதமாக இருந்துள்ளது.

 

Sachin Tendulkar foundation built a school in Sandalpur, MP and will provide free education to 2300 childrens over the next decade for their brighter future. And school dedicated to Sachin Tendulkar's parents.

Great gesture from The God Sachin Tendulkar & his foundation! pic.twitter.com/ULdgflpm1A

— CricketMAN2 (@ImTanujSingh)

 

அதனை அதிகரிக்கும் முயற்சியில் தான் தற்போது சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சந்தல்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 2300 ஏழை குழந்தைகளுக்கு வரவிருக்கும் பத்தாண்டுகளில் இலவசக் கல்வி வழங்க இந்தப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உன்னதமான முடிவானது சச்சின் அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை சச்சின் டெண்டுல்கரின் பெற்றோருக்கு அர்ப்பணித்துள்ளனர்.

சென்னையை பழிதீர்க்குமா கேஎல் ராகுல் அண்ட் டீம்? ரெக்கார்டு என்ன சொல்கிறது?

நாடு முழுவதும் உள்ள ஏழை குழந்தைகளுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்திலும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த உலகத்தை உருவாக்குவதையே சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sachin Tendulkar foundation will build a school in Sandalpur that will provide free education for 2300 children over the next decade as a tribute for his father who was a professor.

Great gesture from God of Cricket. pic.twitter.com/uVjUL9uiEH

— Johns. (@CricCrazyJohns)

 

click me!