ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், மற்படியும் லக்னோவில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 45ஆவது ஐபிஎல் 2023 போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. இதுவரையில் இரு அணிகளும் 9 போட்டிகளில் விளையாடி இரு அணிகளே 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் லக்னோ 3ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ஆவது இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
WTC Final: அடுத்தடுத்து காயமடைந்த பந்து வீச்சாளர்கள்; சிக்கலில் இந்திய அணி!
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டியில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இந்த லக்னோ மைதானத்தில் மட்டும் இரு அணிகளும் மோதியது கிடையாது. இன்று முதல் முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறதோ அந்த அணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
இந்த லக்னோ ஏகானா மைதானத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.
1. டெல்லிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் லக்னோ 193/6 எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 143/9 எடுத்து 50 ரன்களில் தோல்வி அடைந்தது.
2. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி முதலில் ஆடி 121/8 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 127/5 எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லக்னோ 159/8 எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 19.3 ஓவர்களில் 161/8 எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எமனாக வந்த கிரிக்கெட்; விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி!
4. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 135/6 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 128/7 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. கடைசியாக நடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு 126/9 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ 108/10 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தோனி யாரையும் விமர்சித்தது இல்லை; சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்: கோலி மாதிரி கிடையாது!
இதே போன்று சென்னை அணியும், தனது சொந்த மைதானத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலாக நடந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை 217/5 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 205/7 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. முதல் 2 போட்டிகளில் தனது ஹோம் மைதானத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி மற்ற 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
ஆர்சிபி தான் தனக்கு பிடித்தமான அணி - ராஷ்மிகா மந்தனா!