ராகுல் திரிபாதியை வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் எடுத்ததை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சபா கரீம்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்துவிட்டது.
முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் என நூழிலையில் வெற்றியை இழந்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு வலுவான அணியை கட்டமைக்கும் நோக்கில், சில இடங்களுக்கான வீரர்களை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
பேட்டிங் ஆட முடியும்னா, ஏன் முன்னாடியே இறங்கல..? ரோஹித்தை விளாசிய கவாஸ்கர்
அப்படியிருக்கும்போது, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் என ஏற்கனவே ஒருநாள் ஃபார்மட்டில் ஆடும் வீரர்களை ஒதுக்கிவிட்டு, வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி மாதிரியான வீரர்களை எடுத்ததை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சபா கரிம்.
இதுகுறித்து பேசியுள்ள சபா கரிம், வங்கதேச தொடரில் ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதியை எடுத்தது ஏன்..? ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் திரிபாதி இதுவரை என்ன செய்திருக்கிறார்? அவர் டி20 ஸ்பெஷலிஸ்ட் பிளேயர். ஆனால் அவரை ஒருநாள் அணியில் எடுத்திருக்கிறார்கள். அவர் எப்படியும் இந்த தொடரில் ஆடப்போவதில்லை. பிறகு எதற்கு அணியில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்வாளர்களும், அணி நிர்வாகமும் முதலில் கோர் அணியை உறுதி செய்ய வேண்டும் என்றார் சபா கரிம்.
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதர், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யஷ் தயால்.