கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா தோனி..? காத்திருக்கும் ஆர்பி சிங்

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 6:37 PM IST
Highlights

தோனி ஓய்வுபெற்றதும் தான் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. இந்த சாதனையை படைத்த ஒரே கேப்டனும் தோனி தான். இனிமேல் வேறு யாரும் இந்த சாதனையை முறியடிப்பது கடினம்.

2004ம் ஆண்டு இறுதியில் இந்திய அணியில் அறிமுகமாகி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடிய தோனி, 15 ஆண்டுகள் மிகவும் பிசியான வீரராக வலம்வந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர், எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம்  தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4வது முறையாக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தோனிக்கு மிக நெருக்கமான வீரர்களில் ஒருவரான ஆர்பி சிங், தோனி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தோனி தான் பிசியாக இருந்த காலக்கட்டத்தில் கொடுத்த வாக்குறுதி குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து கிரிக்கெட்.காமில் பேசிய ஆர்பி சிங், தோனி மிகவும் எளிமையான, அமைதியான மனிதர். நாங்கள்(வீரர்கள்), ஃபோன் செய்தால் தோனி எடுப்பதேயில்லை என்ற குற்றச்சாட்டை தோனியிடம் கூறுவது வழக்கம். அப்படி ஒருமுறை சொல்லும்போது, அவர் என்னிடமும் முனாஃப் படேலிடமும் ஒரு வாக்குறுதி அளித்தார். ஓய்வுபெற்ற பிறகு, உங்களது ஃபோன் கால்களையெல்லாம் அரை ரிங்கில் எடுத்துவிடுவேன் என்றார். எனவே அவர் வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என சோதிக்க வேண்டும். 

தோனியின் சலுகைகளையெல்லாம் நாங்களே சுரண்டிவிடுவோம். எந்த கேப்டன் இதற்கெல்லாம் அனுமதிப்பார்? கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான உரையாடல் களத்தில் வேறு மாதிரியும் களத்திற்கு வெளியே வேறு மாதிரியும் இருக்கும். தோனியுடன் இருக்கும் போது செம ஜாலியாக இருக்கும் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!