சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், நீதி மோகன், மோகித் சவுகானின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து டிராபியை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டிராபியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, செயலாலர் ஜெய் ஷா, ஐபிஎல் சேர்மன் அருண் துமால், ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து டாஸ் போடப்பட்டது. இதில், புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் போட்டார். டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் முதலில் பேட்டிங் செய்தார். சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), கரண் சரமா, அல்ஜாரி ஜோசஃப், முகமது சிராஜ், மாயங்க தாகர்.
இம்பேக்ட் பிளேயர்: யாஷ் தயாள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மஹீஷ் தீக்ஷனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.
இம்பேக்ட் பிளேயர்: ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மொயீன் அலி.
சிஎஸ்கே நியூ கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்:
இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் முறையாக களமிறங்குகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் ரூ.20 லட்சத்திற்கு தொடங்கி, 2022 ஆம் ஆண்டு முதல் ரூ.6 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
இதுவரையில் 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடங்கும். 159 பவுண்டரி, 73 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்கள் எடுத்துள்ளார்.
சிஎஸ்கே – ஆர்சிபி நேருக்கு நேர்:
இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 31 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 முறை வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் சிஎஸ்கே அணியானது 4-1 என்று கைப்பற்றியிருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்:
இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கத்தில் நடந்த மொத்த போட்டிகள்:
இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறை வெற்றி பெற்றுள்ளது.
🚨 Toss Update 🚨
It's Game 1⃣ of the 2024 and have elected to bat against in Chennai.
Follow the match ▶️ https://t.co/4j6FaLF15Y pic.twitter.com/QA42EDNqtJ