
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், டைகர் ஷெஃராப் ஆகியோர் நடன நிகழ்ச்சி அடங்கேற்றினர். இதே போன்று சோனு நிகம் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இருவரும் இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஏஆர் ரஹ்மான் வந்தே மாதரம் மற்றும் பல்லேலக்கா பாடல் பாடி அசத்தினார். இவர்களை தொடர்ந்து பின்னணி பாடகர் மோகித் சவுகான் கலந்து கொண்டார். மேலும், இந்த வரிசையில் பின்னணி பாடகி நீதி மோகனும் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தினார். கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான் தில் ஷே என்ற படத்தில் இடம் பெற்ற சய்யா சய்யா என்ற பாடலை பாடி அசத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது லைட் மின்னொளியும், இந்தியா கேட்டும், ஐபிஎல் 2024 டிராபியும், சந்திராயன் 3 மைதானத்தில் பிரதிபலிக்கப்பட்டது. இதையடுத்து முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியதோடு தோனியின் கேப்டன்ஷியின் சகாப்தம் முடிந்துவிட்டது. இன்று தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியின் மூலமாக தோனி ஒரு பீல்டராக களமிறங்குகிறார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த தோனி அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஃபிட்டாக இந்த சீசனில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த சீசன் முழுவதும் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 7 கேட்சுகள், 3 ஸ்டெம்பிங் அடங்கும்.