சொதப்பிய ஆர்சிபி – ஆறுதல் கொடுத்த எல்லிஸ் பெர்ரி – 131 ரன்னுக்கு சரண்டர், இதெல்லாம் மும்பைக்கு ஜூஜூபி ஸ்கோர்!

By Rsiva kumar  |  First Published Mar 2, 2024, 9:14 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் 9ஆவது லீக் போட்டி இன்று இரவு தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஷோஃபி டிவைன் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஆரம்பத்திலேயே ஆர்சிபி தடுமாறியது. அதன்பிறகு வந்த சப்பினேனி மேகனா 11 ரன்களில் நடையை கட்டினார். ரிச்சா கோஷ் 7 ரன்களிலும், ஷோபி மொலினெக்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Tap to resize

Latest Videos

ஜார்ஜியா வேர்ஹாம் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாங்கா பாட்டீல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் பூஜா வஸ்த்ரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இஸி வாங் மற்றும் சைகா இஷ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதுவரையில் நடந்த போட்டிகளின் படி ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுமே தலா 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 2 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன. கடந்த சீச்சனில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சேஸிங்கில் தான் 2 போட்டியிலும் மும்பை வென்றிருக்கிறது. இந்தப் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்:

ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர், இஷி வாங், சஜீவன் சஞ்சனா, அமோன்ஜித் கவுர், ஹுமைரா காஸி, கீர்த்தனா பாலகிருஷ்ணா, சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோபி மொலினெக்ஸ், ஜார்ஜியா வேர்கிராம், ஷ்ரேயங்கா பாட்டீ, சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா  தாக்கூர் சிங்.

click me!