MI vs RCB, WPL 8th Match: சேஸிங்கில் கில்லாடியான மும்பை இந்தியன்ஸ் – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

Published : Mar 02, 2024, 07:15 PM IST
MI vs RCB, WPL 8th Match: சேஸிங்கில் கில்லாடியான மும்பை இந்தியன்ஸ் – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் 9ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் 9ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுமே தலா 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 2 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன.

கடந்த சீச்சனில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சேஸிங்கில் தான் 2 போட்டியிலும் மும்பை வென்றிருக்கிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக நாட் ஷிவர் பிரண்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்:

ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர், இஷி வாங், சஜீவன் சஞ்சனா, அமோன்ஜித் கவுர், ஹுமைரா காஸி, கீர்த்தனா பாலகிருஷ்ணா, சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோபி மொலினெக்ஸ், ஜார்ஜியா வேர்கிராம், ஷ்ரேயங்கா பாட்டீ, சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா  தாக்கூர் சிங்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?