NZ vs IND: சூர்யகுமார் யாதவை வீழ்த்துவது எப்படி..? ரோஸ் டெய்லர் வகுத்து கொடுத்த செம வியூகம்

By karthikeyan VFirst Published Nov 22, 2022, 2:19 PM IST
Highlights

மிகச்சிறந்த ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவை எப்படி வீழ்த்தலாம் என்று நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஸ்டெய்லர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த மாபெரும் சக்தியாக வளர்ந்துவருகிறார் சூர்யகுமார் யாதவ். உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடியதன் விளைவாக, தன்னை இந்திய அணியில் தவிர்க்கமுடியாதபடி செய்து,  இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக வளர்ந்துவிட்டார்.

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் அபாரமாக பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது சதமடித்தார். 51 பந்தில் 111 ரன்களை குவித்தார். இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வழக்கம்போலவே சில அசாத்தியமான ஷாட்டுகளை ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டு நியூசிலாந்தை மிரட்டினார். இந்திய அணி அடித்த 191 ரன்களில் 111 ரன்கள் சூர்யகுமார் யாதவ் அடித்தது. எஞ்சிய 80 ரன்களை மற்ற வீரர்கள் சேர்ந்து அடித்தனர்.

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வியந்து புகழ்ந்திருந்தார். தான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் சூர்யகுமாரின் இந்த இன்னிங்ஸும் ஒன்று என்றும், அவர் ஆடிய பல ஷாட்டுகளை இதற்கு முன் பார்த்ததேயில்லை என்றும், அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர் என்றும் கேன் வில்லியம்சன் புகழ்ந்திருந்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 42 போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 1395 ரன்களை குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஐசிசி டி20 ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ளார். 

சூர்யகுமார் யாதவ் இன்றைய தேதியில் எதிரணிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக திகழும் நிலையில், அவரை வீழ்த்துவது எப்படி என்று ரோஸ் டெய்லர் ஆலோசனை கூறியுள்ளார். 

ஒருநாள் போட்டியில் 277 ரன்கள். தொடர்ந்து 5 சதங்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் CSK

இதுகுறித்து பேசிய ரோஸ் டெய்லர், சூர்யகுமார் யாதவை பேட்டிங் முனையில் விடாமல் முடிந்தவரை மறுமுனையில் நிற்கும் வீரர்களுக்கு அதிகமாக பந்துவீச வேண்டும். சூர்யகுமாரும் மனிதன் தானே... அவரும் தவறிழைப்பார். அவரை முடிந்தவரை மறுமுனையில் நிறுத்தினாலே அவரை வீழ்த்துவதற்கு 50-50 வாய்ப்பு உருவாகும். ஆனால் இப்போதைக்கு அவர் பேட்டிங் ஆடும் விதத்தை பார்க்கையில், மெல்பர்ன் மைதானத்திலேயே சிக்ஸர்களை விளாசுகிறார் என்றால், மெக்லீன் பார்க் (நியூசிலாந்து நேப்பியர் ஸ்டேடியம்) மைதானத்தில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்வார் என்று ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.
 

click me!