NZ vs IND: 3வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published Nov 22, 2022, 12:55 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் நடக்கிறது. இந்த போட்டியிலும் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்கியுள்ளன. 

NZ vs IND: நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த தீபக் ஹூடா

நேப்பியரில் நடக்கும் இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால் டிம் சௌதி கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் ஆடுகிறார்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ஹர்ஷல் படேல் ஆடுகிறார்.

இந்திய அணி:

ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

விஜய் ஹசாரே டிராபி: 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாதனை வெற்றி

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன்.
 

click me!