இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியிலிருந்து வில்லியம்சன் விலகல்! நியூசி., அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 21, 2022, 7:03 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் (51 பந்தில் 111 ரன்கள்) 20 ஓவரில் 191 ரன்களை குவித்து, நியூசிலாந்தை 126 ரன்களுக்கு சுருட்டி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

விஜய் ஹசாரே டிராபி: 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாதனை வெற்றி

இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, இந்தியவை ஜெயிக்க விடாமல் தொடரை டிரா வேண்டுமானால் செய்யலாம். அந்த முனைப்பில் தான் நாளை நடக்கும் கடைசி டி20 போட்டியில் களமிறங்குகிறது.

இந்நிலையில், இந்த கடைசி டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். கேன் வில்லியம்சன் மருத்துவ பரிசோதனைக்காக நாளை மருத்துவர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். எனவே வில்லியம்சன் நாளைய போட்டியில் ஆடமாட்டார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வில்லியம்சனுக்கு மாற்று வீரராக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் ஆடாததால் அணியின் சீனியர் வீரரான டிம் சௌதி நியூசிலாந்துஅணியின் கேப்டனாக செயல்படுவார்.

சூர்யகுமார் பற்றி 11 ஆண்டுக்கு முன் ரோஹித் போட்ட டுவீட்!இப்போது வைரல்; ரோஹித்தின் விஷன்.. கொண்டாடும் ரசிகர்கள்

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன்/மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன்.
 

click me!