NZ vs IND: நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த தீபக் ஹூடா

By karthikeyan VFirst Published Nov 21, 2022, 9:31 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியில் 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய தீபக் ஹூடா சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் ஆடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 2வது சதத்தை பதிவு செய்தார். 51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் 20 ஓவரில் இந்திய அணி 191 ரன்களை குவித்தது.

விஜய் ஹசாரே டிராபி: 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாதனை வெற்றி

192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். வில்லியம்சன் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் தீபக் ஹூடா 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான சர்வதேச டி20 போட்டியில் இதுதான் பெஸ்ட் பவுலிங் ஆகும். நியூசிலாந்து - இந்தியா டி20 கிரிக்கெட்டில் பெஸ்ட் பவுலிங் வீசிய பவுலர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இதற்கு முன் மிட்செல் சாண்ட்னெர், டேனியல் வெட்டோரி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூவர் மட்டுமே இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனர். அவர்களை விட குறைவான ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதால் தீபக் ஹூடா இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 

சூர்யகுமார் பற்றி 11 ஆண்டுக்கு முன் ரோஹித் போட்ட டுவீட்!இப்போது வைரல்; ரோஹித்தின் விஷன்.. கொண்டாடும் ரசிகர்கள்

அக்ஸர் படேல் நியூசிலாந்துக்கு எதிராக 9 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தீபக் ஹூடாவுக்கு அடுத்த பெஸ்ட் பவுலிங் அக்ஸர் படேல் வீசியதுதான்.

click me!