உண்மையாவா? கடந்த 3 வருடத்தில் ரோகித் சர்மா, பும்ரா, கோலி இணைந்தது 2 ஒரு நாள் போட்டியில் மட்டுமே!

By Rsiva kumarFirst Published Jan 9, 2023, 1:43 PM IST
Highlights

கடந்த 3 ஆண்டுகளில் ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து 2 ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளனர்.
 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், ரோகித் சர்மா 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விலகினார். அதன் பிறகு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடத்தை இழக்கும் சீனியர் வீரர்..! உத்தேச ஆடும் லெவன்

கடந்த 2020 ஆம் ஆண்டு 3 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாக 171 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 119 ரன்கள் சேர்த்துள்ளார். இதே போன்று கடந்த 2021 ஆம் ஆண்டு விளையாடியுள்ள 3 ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 90 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக எடுத்தது 37 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாக 249 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 76 ரன்களே அதிகபட்ச ரன்கள் ஆகும்.

ஓரங்கப்பட்ட ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் இடம்!

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இணைந்து 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர் என்பதை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், அது தான் உண்மை. மூவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளில் 2 ஒரு நாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில் ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் இடம் பெற்றிருந்தனர். விராட் கோலி மட்டும் இடம் பெறவில்லை. இதே போன்று வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பும்ரா இடம் பெறவில்லை.

சூர்யகுமார் மட்டும் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், காணாமல் போயிருப்பார்..! PCB-க்கு குட்டு வைத்த சல்மான் பட்

இப்படியாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இணைந்து விளையாடி 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பும்ரா இடம் பெற்றுள்ளார் என்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பும்ரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் 2ஆவது இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

 

Virat Kohli, Rohit Sharma and Jasprit Bumrah will be playing just their 2nd ODI together in 3 years.

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!